புரசைவாக்கம்: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பேராலயம் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் துணை முதல்வர் கலந்து கொண்டார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சென்னை கிறிஸ்தவ பேராலயம் சார்பில் மாநில அளவில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதனை அடுத்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்வில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,சேகர்பாபு மேயர் பிரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.