தருமபுரி: பெண்கள் அனைத்து சாதனைகளையும் நிகழ்த்தும் சக்தி என ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் பேசினார்.
அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியரிடையே இணைய பயன்பாடுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் கல்வி பயிற்சி வாரியம் மூலம் ‘அகல் விளக்கு’ என்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில், தருமபுரி மற்றும் அரூர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்