வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் ரோட்டில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில தேர்தல் பொறுப்பாளர் அழகர்சாமி, ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விவரங்கள் கேட்டறிந்தனர். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முருகநாதன், வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் திருமுருகன், பேரூர் செயலாளர் பால்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால், மற்றும் கலந்து கொண்டனர்.