தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, தெற்கு காமராஜ் நகரில் வசிப்பவர் ராமநாதன் மகன் முனியசாமி (19), உத்தரபிரதேச மாநிலம் பகப்பூர் சேர்ந்த பியூரி அலி மகன் சிரமான் அலி (24). இவர்கள் இருவரும் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து பைக்கில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர்.