தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2,500க்கு விற்பனை
தூத்துக்குடி மலா் சந்தைக்கு பேரூரணி, ஓசனூத்து, அல்லிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வருகிறது. நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடர் மழையின் காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்தது மல்லிகை பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.