கிருஷ்ணராயபுரம்: வீரராக்கியம் வி.கே.ஏ கொசுவலை கம்பெனி அருகே பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் பைக்கில் வீரராக்கியம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் மற்றொரு பைக்கில் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதில், திருநாவுக்கரசு கார் டயரில் சிக்கி இழுத்துச் சென்று சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜீவ் காந்தி அளித்த புகாரின் பெயரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.