தூத்துக்குடி: நால்வர் நகர் பகுதியில் மழை நீரில் நடந்து சென்ற முதியவர் பழனியாண்டி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு தென்பாகம் போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் நேற்று மதியம் மூன்று மணி முதல் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக இன்று காலை 6.30 மணி நிலவரம் படி தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் 66 மில்லி மீட்டர் மழையானது பதிவானது. இந்நிலையில் தூத்துக்குடி கணேச நகர் என் ஜி ஓ காலனி அருகே உள்ள நால்வர் நகர் பகுதியில் மழை நீரில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஸ்பின்னிங் மில் தொழிலாளி கணேசன் நகர் 2வது தெருவை சேர்ந்த 75 வயதான பழனியாண்டி என்பவர் அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளியே உள்ள பல்பிற்கு மின்சாரம் செல்லக்கூடிய வயரானது கட்டாகி மழைநீரில் விழுந்துள்ளது.