காளையார்கோவில்: ஆ.கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், ஆ.கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் அருகாமைப் பள்ளியின் அவசியம் மற்றும் அரசு பள்ளியில் வழங்கப்படும் சலுகைகள் தாய்மொழி கல்வியின் சிறப்பு ஆகியவை குறித்தும் முழக்கங்கள் எழுப்பினர், அதன் பின்னர் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி எழுத்துப்பலகை, பென்சில் பெட்டி வழங்கியும் பூக்கள் தூவியும் வரவேற்று சிறப்பிக்கப்பட்டது.