கடலாடி: பெற்ற குழந்தைகளின் கண் முன்னே கொடூரமாக வெட்டி தாய் கொலை, சாயல்குடி அருகே பயங்கரம்
சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில், ஜெர்மின் என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் விஜயகோபால் என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த ஜெர்மின், கடந்த ஐந்து ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் ஜெர்மின் தனது குழந்தைகளுடன் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், ஜெர்மினை பயங்கர ஆயுதங்களால் ரத்த வெள்ளத்தில் வெட்டி சாய்த்து கொலை செய்து உள்ளனர்