தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் முருகன், மந்திரம் ஆகியோர் கடந்த 25ம் தேதி இரவு டாஸ்மாக் பாரில் மது குடித்து கொண்டிருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டனர். குடும்ப தகராறில் அவர்களை கொலை செய்ததாக கோமு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நிகழ்ந்தபோது டாஸ்மாக் பாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.