திருச்செந்தூர்: விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை சிவன் கோயில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்தது
திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. திடீரென இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய, பலத்த மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்து வருகிறது.