கடவூர்: காணியாளம்பட்டியில் பாறை குழியில் பதுக்கி வைத்திருந்த 14 மதுபாட்டில்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
Kadavur, Karur | Apr 9, 2024 கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சதீஷ்குமார், காணியாளம்பட்டியில் தேர்தல் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது சி-விஜில் என்ற ஆப் மூலம் வந்த தகவலின் படி, பாறை குழிக்கு சென்று சோதனையிட்ட போது, அங்கிருந்த சிலர் தப்பி ஓடிவிட்டனர். அதனையடுத்து பதுக்கி வைத்திருந்த ₹1,960 மதிப்புள்ள 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மாயனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.