திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் இன்று குவிந்தனர்
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை அதிகாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து பத்து மக்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் அக்டோபர் மாதம் 2ம் தேதி நள்ளிரவு கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது.இந்த திருவிழாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.