அரியலூர்: நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
அரியலூர் நகர் பகுதியில் இருந்த பேருந்து நிலையம் பழுதடைந்த காரணத்தால், அதனை இடித்து விட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.