திருச்செந்தூர்: ஆறுமுகநேரி அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று காலை 7 மணி அளவில் ஆறுமுகநேரி - காயல்பட்டணம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரயில் மோதியதில் அவரது உடல் இரண்டு துண்டானது.