வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கரூர் எம்பி ஜோதிமணி அவர்களின் முயற்சியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரபார்வை, வெள்ளெழுத்து போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் ஏற்று கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.