சிவகங்கை: பட்டா நிலத்திற்கு மூப்பையூர் ஊராட்சி வரி ரசீது போடவில்லை என மாற்றுதிறனாளி முதியவர் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மேலக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தியாகராஜன். மாற்றுதிறனாளியான இவருக்கு சொந்தமான பட்டா இடம் மூப்பையூரில் உள்ளது. இதற்கு மூப்பையூர் ஊராட்சியில் வரி ரசீது போடவில்லை என கூறப்படுகிறது. அந்த இடத்தில் கடை அமைப்பதற்கான புதிய கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் கட்டியுள்ளார்