ராஜசிங்கமங்கலம்: திருப்பாலைக்குடி  நாட்டுப்படகு மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்
தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில்  மீன்பிடிக்க சென்ற விமல் ராஜ், மாதேஷ்,சக்ரம், கார்த்தி ஆகிய நான்கு பேர் கச்சத்தீவில் நின்று கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் நான்கு பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை  அதிகாரிகள் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீனவர்களை வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து மீனவர்கள் நான்கு பேரும் யாழ்ப்பாணம் சிறையில்  அடைக்கப்பட்டனர்