வண்டலூர்: வல்லாஞ்சேரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளி முன் ஆர்ப்பாட்டம்
கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரியில் பிரபலத் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு ஆசிரியர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.