ஸ்ரீவைகுண்டம்: பொட்டலூரணி அருகே நான்கு வழிச்சாலையில் மினி லாரி விபத்து சாலை முழுவதும் மீன்கள் சிதறி கிடந்தது
கன்னியாகுமரியில் இருந்து ஏற்றுமதி ரக மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் ஜான் பீட்டர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே வரும்போது மழை காரணமாக திடீரென நிலை தடுமாறி நான்கு வழி சாலை சென்ட்ரல் மீடியன் மீது ஏறி மினி லாரி கவிழ்ந்து விபத்தானது.