சிவகங்கை: மீனாட்சிபுரம் பகுதியில் குடிநீர், பாதை வசதி இன்றி மக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதி குடியிருப்பாளர்கள் கூறுகையில்: “எங்கள் வீடுகளுக்கு குழாய் தண்ணீர் வசதி இல்லை. பல ஆண்டுகளாக வேறு இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். மேலும், வீடுகளுக்கு செல்லும் பாதையை சிலர் தடை செய்ததால், தினசரி வாழ்க்கை கடினமாகியுள்ளது.