விருத்தாசலம்: மாசிமகத்தை ஒட்டி விருத்தகிரீஸ்வரர் கோவில் மணிமுத்தாற்றில் மின்னொளியில் மின்னும் வீடியோவை நகர்மன்ற தலைவர் முகநூலில் பதிவு
புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் மாசி மக திருவிழா மணிமுத்தாற்றில் மிக விமர்சையாக நடைபெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர். இந்நிலையில் மாசி மகத்தை ஒட்டி மின்னொளியில் மின்னும் மணிமுத்தாறு ஆற்றின் கழுகு பார்வை காட்சிகளை நகர் மன்ற தலைவர் வெளியிட்டார்.