குஜிலியம்பாறை: புதிய ரேஷன் கடை அமைக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
குஜிலியம்பாறை தாலுகா வேடசந்தூர் ஒன்றியத்தில் உள்ள நாகையகோட்டை ஊராட்சி செங்கோட்டைபட்டி ஊர் மக்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வைவேஸ்புரத்திற்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாட கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அரசின் சார்பில் செங்கோட்டைபட்டி கிராமத்திற்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றியதத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.