சிவகங்கை: ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வசதி குறைவு – பரபரப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளிக்க வரும் நிலையில், பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மின்விசிறிகள் செயல்படாதது, குடிநீர் வசதி இல்லாமை, போதிய இருக்கை ஏற்பாடு செய்யப்படாதது குறித்த குற்றச்சாட்டு எழுந்தது