அரியலூர்: நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை- இஸ்லாமியர்கள் பங்கேற்பு
பக்ரீத் பண்டிகையொட்டி அரியலூர் நகரில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காகவும், மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் முன்னோர்களின் சமாதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.