எட்டயபுரம்: எட்டையாபுரம் பஜார் பகுதியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பஜார் பகுதியில் வட மாநிலத்தைச் சார்ந்த குமார் சர்மா மற்றும் கோவில்பட்டி பகுதியை சார்ந்த சரவணன் ஆகியோர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எடுத்து சில்லறை மாற்ற முயன்றனர். சந்தேகம் அடைந்த கடைக்காரர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நிலையில் அங்கு வந்த போலீசார் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவரை கைது செய்து 70 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.