தஞ்சாவூர்: பாஜகவின் கூட்டாளியாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: தஞ்சாவூரில் வலுவாக எழுந்த கோஷம்
தஞ்சாவூரில் இன்று மதியம் வாக்கு காப்புரிமை இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்தியிலும் பாஜகவின் கூட்டாளியாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் பீகாரில் லட்சக்கணக்கானோரின் வாக்குரிமையை பறித்து குடியுரிமையை இழக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தை உடன் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன