வேடசந்தூர்: மேட்டுபட்டியில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் கொட்டும் மழையில் பௌர்ணமி பூஜை
வடமதுரை ஒன்றியம் கொல்லப்பட்டி கிராமம் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் பன்னீர் முதலான 16 வகையான அர்ச்சனைகள் நடந்து அன்னாபிஷேகம் நடைபெற்று தீபராதனைகள் ஆராதனைகள் நடைபெற்று சிவபக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடமதுரை புத்தூர் அய்யலூர் சித்துவார்பட்டி பிலாத்து தென்னம்பட்டி கொல்லப்பட்டி மேட்டுப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டு சிவ அருளையும் பிரசாதம் பெற்று சென்றார்கள்.