தஞ்சாவூர்: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை... அதிமுக நிர்வாகியை கொலை செய்த வாலிபர் தஞ்சாவூரில் போலீசாரிடம் சரண்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை அதிமுக நிர்வாகி குத்தி கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்டர் அடைந்தார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மாத்துரை சேர்ந்த கனகராஜை தான் கத்தியால் குத்தி கொலை செய்ததாக அஸ்வின்ராஜ் ஒத்துக் கொண்டார். இதையடுத்து அஸ்வின் ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.