காரியமங்கலம்: தர்மபுரி அருகே தனியார் கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயன், இவரது மனைவி நளினி,இவர்களின் 17வயது மகள் பூவிதா,தர்மபுரி அடுத்த தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 14ம் தேதி கல்லூரிக்கு வந்த பூவிதா திடிரென கல்லூரியின் 3வது தளத்திற்க்கு சென்று திடீரென அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.