தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் தேர்விற்க்கு தயாராகும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 2ம் நிலை காவலர் தேர்விற்க்கு தயாராகக் கூடிய முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் 20 பேருக்கு முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் தேர்வுக்கு தயாராவதற்கு தக்க அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு, உதவியாக மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.