கோவில்பட்டி: ஆலம்பட்டி கிராமத்தில் கோவிலுக்கு புதிய உணவுக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு புதிதாக உணவு கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.