குஜிலியம்பாறை தாலுகா சின்னழகுபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மகன் ஆனைப்பட்டியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் மாணவர் திருடியதாக கூறி மாணவரை வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வரும் பொழுது தூக்கி சென்று தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சனிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவரை வீடு புகுந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த மாணவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.