மண்ணச்சநல்லூர்: நானும், மதிமுகவும் வீழமாட்டோம். பைத்தியக்கார பயல்களா எங்களை யாரும் வீழ்த்த முடியாது -சிறுகனூர் அருகே நடந்த மாநாட்டில் துரை வைகோ எம்.பி ஆவேச பேச்சு
மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திடலில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கட்சியின் ஆட்சி மன்ற குழு செயலாளருமான கிருஷ்ணன் தலைமையில் நகர் வடக்கு மாவட்ட செயலாளர் சேகரன் வரவேற்புரை ஆற்றினர்.