தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2025-26 நடப்பு நிதியாண்டான 14.12.2025 அன்று 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டை இதே காலநிலையிடன் ஒப்பிடுகையில் 7 நாட்களுக்கு முன்பாகவே துறைமுகம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. இது துறைமுகத்தின் செயல்திறன் மேம்பாட்டையும், வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது.