யூடியூபர் சேனல் நடத்தி வரும் முக்தார் என்பவர் அவருடைய சேனலில் முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூராக பேசி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக சித்தரித்துபேசியும் வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழக முழுவதும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூபர் முக்தார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நாடார் பேரவை சார்பில் தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.