மதுரை மேற்கு: சாலையில் உள்ள மஞ்சள் வேகத்தடையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை#localissue
கன்னியாகுமரி-பெங்களுரூ நான்கு வழிச்சாலையில் நாகமலை புதுக்கோட்டை - துவரிமான் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மஞ்சள் வண்ண வேகத்தடை ஏற்படுத்தி உள்ளார்கள். இதில் குறிப்பிட்ட அளவை விட அதிகமான உயரமாக இருப்பதால் வேகத்தில் வரும் வாகனங்கள் நிலைத்தடுமாறி அருகில் உள்ள வாகனங்களின் மேல் இடித்து விபத்து ஏற்படுகிறது என வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.