அம்பத்தூர்: தொழிற்பேட்டை அருகே நடு ரோட்டில் அரசு பேருந்து மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் - சாமர்த்தியமாக பேசி அனுப்பி வைத்த போக்குவரத்துக் காவலர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அரசு பேருந்து முன்பாக கார் ஓட்டுனர் தனது காரை நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே அங்கு வந்த போக்குவரத்து காவலர் இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்