ஆத்தூர்: பெரிய மல்லனம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி தங்கள் வீட்டில் கட்டிய தவெக கொடியை கழற்றியதற்கு ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெத்தன். இவரது மகன் முருகன் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளரிடம் கேட்காமல் கொடியை கட்டி உள்ளதால் வீட்டில் கட்டிருந்த கொடியை முருகன் அவிழ்த்து உள்ளார். இதையடுத்து முருகனுக்கு தொலைபேசியில் அழைத்த தவெக கட்சியை சேர்ந்த பாண்டீஸ்வரி கொடியை யாரைக் கேட்டு அவிழ்த்தாய் கொடிய அவிழ்ப்பதற்கு முன் என்னிடம் கேட்டிருக்க வேண்டும் எனக் கூறி ஆபாசமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.