மதுரை வடக்கு: குலமங்கலம் பகுதியில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையில் ஈடுபட்ட முதியவர் கைது
கூடல் புதூர் காவல் நிலைய போலீசார் குலமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட தினகரன் என்ற எழுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது