சிவகங்கை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேருந்து நிலையம் அருகே 12வது இரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சிவகங்கை மாவட்ட கிளை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய 12வது இரத்ததான முகாம் இன்று சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள மஸ்ஜித் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்முகாமை TNTJ மாநிலச் செயலாளர் ரபீக் முகமது அவர்கள் தொடங்கி வைத்தார். முகாமில் 50க்கும் மேற்பட்ட இரத்ததானிகள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.