திருச்செந்தூர்: கோவில் கொடை தகராறு எதிரொலியாக ஆறுமுகநேரியில் கோவில் பூசாரி கொலை கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் முருகேசன் (54). இவர் காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை இவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.