இளையாங்குடி: கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்– மக்கள் நீர் மாதிரி ஆய்வு செய்ய கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தை ஒட்டியே வைகை ஆறு,செல்கிறது இது விவசாயத்திற்கும் குடிநீர்க்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. கடந்த மாதங்களில் கடுமையான வெயில் காரணமாக ஆற்றில் நீர் மட்டம் குறைந்து தீடிரென நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன.