சிவகங்கை: ஒய்வுபெற்ற ராணுவ வீரர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமநாதன், தனது மனைவி உயிரிழந்த நிலையில் சொத்துகள் குழந்தைகளின் பெயரில் எழுதப்பட்டதால் அவர்களிடமிருந்து அரவணைப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் புகார் அளித்திருந்தார்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது