தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழை நீரால் நோயாளிகள் கடும் அவதி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பலத்த மழை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் வார்டுகளுக்கு உள்ளேயும் மழை நீர் உட்புகந்து பாதிக்கப்பட்டுள்ளது.