தூத்துக்குடி: கோவையில் மெட்ரோ ரயில் நிராகரிப்பு, பாஜக தமிழர்களை வஞ்சித்து வருகிறது தருவை மைதானத்தில் கனிமொழி எம்பி பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் டிஎம்பி அறக்கட்டளை மூலம் 1 கோடியே 45 லட்சம் லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் மற்றும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் 65.24 லட்சம் மதிப்பில் ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நீச்சல் குளத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.