அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் நேற்று தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இறுதியாக வாழ்வாங்கி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய பிரபாகரன், உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும், நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் 10 மணி ஆகிவிட்டது என் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்கிறேன்" என சரியாக 10 மணி அளவில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.