கந்த சஷ்டி திருவிழா முருகப்பெருமான் ஆலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.