நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சி பிச்சம்பட்டியில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டு நடைபெறுவதாக கூறி தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமையில் செங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பிச்சம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.