வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன் இவர் பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 2 பேர் அவசரமாக பேச வேண்டும் என்று குருநாதனின் செல்போனை வாங்கி பேசுவது போல் நடித்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் காந்திநகரை சேர்ந்த ராஜேஷ், விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்